பவானிசாகர் அணை நீர்மட்டம் 56.37 அடியாக உயர்வு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து சனிக்கிழமை (ஜூன்.8) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 607 கன அடியாக உள்ளது.
பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து சனிக்கிழமை (ஜூன்.8) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 607 கன அடியாக உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் பவானி ஆறும், மோயாறும் இணையும் இடத்தில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணை ஈரோடு மாவட்ட மக்கள் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவதோடு, 3 மாவட்டங்களின் முக்கிய பாசன தேவையாகவும் விளங்குகிறது.
இந்த நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது. நேற்று (ஜூன்.7) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 952 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.8) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 607 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கனஅடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 155 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 56.25 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 56.37 அடியாக உயர்ந்தது. அப்போது, அணையின் நீர் இருப்பு 6.14 டிஎம்சியாக இருந்தது.