96 அடியை நெருங்கி வரும் பவானிசாகர் அணை நீர்மட்டம்
Erode News- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96 அடியை நெருங்கி வருகிறது. நீர்வரத்து 4,886 கன அடியாக அதிகரித்துள்ளது.
Erode News, Erode News Today- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96 அடியை நெருங்கி வருகிறது. நீர்வரத்து 4,886 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக விளங்குகிறது. 105 அடி உயரமுள்ள இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.
அணைக்கு நீர்வரத்து நேற்று (8ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,015 கன அடியாக இருந்த நிலையில், இன்று (9ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,886 கன அடியாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், நேற்று காலை 95.46 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 95.59 அடியாக உயர்ந்தது. விரைவில் 96 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அணையில் நீர் இருப்பும் 25.41 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.
மேலும், அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 905 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,005 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.