பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.52 அடி

அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.52 அடியானது.

Update: 2023-01-10 06:45 GMT

பவானிசாகர் அணை (பைல் படம்).

அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.52 அடியானது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்டது. அணையில் இருந்து பவானி ஆறு, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் சுமார் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது.

அணையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும் பாசனத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.மேலும், அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது.

இன்று (10.01.2023) காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 102.52 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 30.74 டிஎம்சி ஆகும்.  அணைக்கு விநாடிக்கு 778 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 24 மணி நேரத்தில் சராசரி நீர்வரத்து 1,652 கன அடியாக உள்ளது. தற்போது, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு விநாடிக்கு 1,700 கன அடி, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 800 கன அடி, பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடி என மொத்தம் 2,600 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News