பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும், நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மெல்ல சரிந்து வருகிறது.

Update: 2024-05-12 04:15 GMT

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும், நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மெல்ல சரிந்து வருகிறது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். 

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும், குடிநீர் தேவைக்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மெல்ல சரிந்து வருகிறது.

தற்போது அணையின் நீர்மட்டம் 44 அடியாக குறைந்ததால், கடல் போல் பிரம்மாண்டமாக காட்சியளித்த பவானிசாகர் அணை தற்போது குளம், குட்டை போல் சுருங்கி காட்சியளிக்கிறது. இன்று (மே.12) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 19 கன அடி நீர் வீதம் வந்து கொண்டிருந்தது.

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் 205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 44.50 அடியாகவும், நீர் இருப்பு 3.24 டிஎம்சியாகவும் உள்ளது.

Tags:    

Similar News