பவானிசாகர் அணை நீர்மட்டம் 92 அடியாக சரிவு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தை விட, அணையில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தை விட, அணையில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக விளங்குவது பவானிசாரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை. இந்நிலையில், அணை வரும் நீர்வரத்தை விட வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
அணைக்கு நீர்வரத்து நேற்று (செப்.16) திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 743 கன அடியாக இருந்த நிலையில், இன்று (செப்.17) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,286 கன அடியாக அதிகரித்தது. அதேசமயம், நேற்று காலை 93.35 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 92.98 அடியாக சரிந்தது.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்கால் பாசன பகுதிக்கு வினாடிக்கு 750 கன அடி தண்ணீரும், காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 100 அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.