பவானிசாகர் அணை நீர்மட்டம் 55 அடியாக உயர்வு..!
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன்.2) இன்று காலை 8 மணி நிலவரப்படி 55.15 அடியாக உயர்ந்தது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன்.2) இன்று காலை 8 மணி நிலவரப்படி 55.15 அடியாக உயர்ந்தது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து நேற்று அதிகரித்தது.
நேற்று (ஜூன்.1) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 983 கன அடியாக இருந்த நீர்வரத்து, நண்பகல் 12 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,962 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 54.77 அடியாக இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், குடிநீருக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 205 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜூன்.2) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 1,575 கன அடியாக குறைந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 55.15 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 205 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 5.78 டிஎம்சியாக உள்ளது.