97 அடியை நெருங்கும் பவானிசாகர் அணை: நீர்வரத்து 4,471 கன அடியாக அதிகரிப்பு

Erode News- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,471 கன அடியாக அதிகரித்துள்ளதால், அணை நீர்மட்டம் 97 அடியை நெருங்கி வருகிறது.

Update: 2024-08-16 03:15 GMT

Erode News- பவானிசாகர் அணைப் பகுதி (கோப்புப் படம்).

Erode News, Erode News Today- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,471 கன அடியாக அதிகரித்துள்ளதால், அணை நீர்மட்டம் 97 அடியை நெருங்கி வருகிறது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. 

இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. நேற்று (15ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,261 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (16ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,471 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 96.37 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 96.66 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து, நீர்வரத்து அதிகரித்தால், அணையின் நீர்மட்டம் விரைவில் 97 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 26.19 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. 

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 250 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 850 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 0.8 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News