ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய ஆம்புலன்ஸ்
பொது மக்களின் சேவைக்காக ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.;
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, முதலமைச்சர் மு க ஸ்டாலின், பொது மக்களின் சேவைக்காக புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கியுள்ளார். இந்த ஆம்புலன்ஸில் அதிநவீன வசதியுடன், அதிநவீன உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது.
மேலும் இதில் இ.சி.ஜி. மானிட்டரில் ரத்த அழுத்தம் அளவிடும் கருவி, நோயாளிகளை படுக்க வைக்க உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய படுக்கை போன்ற வசதிகள் உள்ளன. இந்த ஆம்புலன்ஸ், ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. புதிதாக வழங்கப்பட்ட ஆம்புலன்சை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர்.