பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் எச்.ராஜா சாமி தரிசனம்
பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார்.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்தபின் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது, தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்துக்களின் நிலத்தை திரும்ப வழங்க வேண்டும். குறிப்பாக பவானி பகுதியில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலம் என்று கூறப்படும். இந்துக்களின் நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். வரும் செப்டம்பர் மாதம் 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் சாமனிய பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது. கடந்த 6மாதமாக 2000 ரூபாய் நோட்டுகள் முடக்கப் படலாம் என்ற தகவல் வெளியில் வந்த வண்ணம் இருந்தது. 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு தான் இது பாதிப்பு. கர்நாடக தேர்தலை பொருத்தவரையில், பாஜகவின் தோல்வி குறித்து பாஜக தலைமை ஆய்வு செய்து வருகிறது. பாஜகவை பொறுத்தவரை அதிமுகவின் கூட்டணியில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
போட்டியின்போது ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் கலைவாணி விஜயகுமார், பவானி நகர் மண்டல தலைவர் நந்தகுமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மோகன், குமார், சித்தி விநாயகம், பாலசுப்பிரமணியம், மற்றும் மாவட்டச் செயலாளர் கண்ணன், பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜாளி நஞ்சப்பன், ஒன்றிய தலைவர் தனக்கொடி, மாவட்ட நெசவாளர் பிரிவு துணை தலைவர் செல்வகுமார், பவானி நகர் இளைஞரணி தலைவர் திருநாவுக்கரசு, இளைஞர் அணி செயலாளர் ராஜா, கலை கலாச்சார பிரிவு மாவட்ட செயலாளர் ராஜா, கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, பார்த்திபன் தெற்கு மாவட்ட ஐடி பிரிவு தலைவர் ரஞ்சித் குமார், பவானி நகர செயலாளர் ரேவதி,தர்மலிங்கம்,மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் மணிகண்டன், நகர துணைத் தலைவர் காதிமோகன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.