பவானி சங்கமேஸ்வரர் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது

ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-27 11:49 GMT

கைது செய்யப்பட்ட கிருஷ்ணன்.

பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக பவானி சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக பல்வேறு இடங்களில்  உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. அந்த உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வழிபாடுகள் முடிந்த பின்னர் கோயில் நடை அடைக்கப்பட்டது. அப்போது, கோயிலில் உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் சனீஸ்வரன் சன்னதியில் உள்ள உண்டியலை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனைக் கண்ட இரவு காவலர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் சோழகர் காலனி பகுதியில் வசிக்கும் மாதன் மகன் கிருஷ்ணன் (வயது 22) என்பதும், அந்தியூரில் உள்ள ஒரு பண்ணையில் விவசாய கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. 

பின்னர், இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பவானி போலீசார் கிருஷ்ணனைக் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில்ட ஆஜர்படுத்தி சிறை காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News