பவானி: தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சி

தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு தீயணைப்புத்துறையினர், பவானி கூடுதுறையில், ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர்.

Update: 2022-06-17 05:15 GMT

பவானி கூடுதுறையில், தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர்.

தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் பவானி தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தின் சார்பில், எச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதுறை பவானி ஆற்றில் இன்று இந்த ஒத்திகை பயிற்சி நடந்தது.


இதில், தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் ஆர்.ஜான்சன் தலைமையில், தீயணைப்பு பணியாளர்கள், ஏரி, ஆறு, குளம், கிணறு மற்றும் அணைகளில் பருவமழையின்போது நீர்நிரம்பி வரும் சூழலில், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க, ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர். மேலும், தண்ணீரில் விழுந்தவர்களை காப்பாற்றவும், நீரில் அடித்து செல்பவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும், போலி ஒத்திகை பயிற்சி செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பருவமழை காலத்தில் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை குறித்தும், மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Tags:    

Similar News