கோபி பேருந்து நிலையத்தில் பாரதிய போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோபி பேருந்து நிலையத்தில் பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் முடிவை எதிர்த்து, கோபி பேருந்து நிலையத்தில் பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று (6ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கும் அரசின் முடிவை எதிர்த்து, ஈரோடு மண்டல பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (பி.எம்.எஸ்) சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரவை செயலாளர் பூபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் முருகேசன் மற்றும் தனசேகரன் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலாளர் சங்கர் மற்றும் பேரவை தலைவர் விமேஸ்வரன் ,பொதுச்செயலாளர் பாலன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து உரையாற்றினர்.
இதில், கோபி, சத்தி, அந்தியூர், பவானி உள்ளிட்ட கிளைகளை சேர்ந்த பேரவை உறுப்பினர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தனியார் மயமாக்கும் அரசின் முடிவுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.