அந்தியூர்,கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.9.15 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
அந்தியூர், கோபிசெட்டிபாளையம் கூட்டுறவு சங்கங்களில் ரூ.9.15 லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம் போனது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 48 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 38 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 650 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 700 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 400 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 625 ரூபாய்க்கும் , தேன் வாழை தார் ஒன்று 760 ரூபாய்க்கும், ரொப்பர் வாழை தார் ஒன்று 520 ரூபாய்க்கும் விற்பனையானது.மொத்தம் 1,430 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், 3 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நாளை ஆடி 18 விடுமுறை என்பதால் நேற்று வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இதில் கதலி ஒரு கிலோ ரூ.45-க்கும், நேந்திரன் ஒரு கிலோ ரூ.41-க்கும், பூவன் தார் ஒன்று ரூ.780-க்கும், செவ்வாழை தார் ஒன்று ரூ.720-க்கும் , ரொபஸ்டா தார் ஒன்று ரூ.560-க்கும் ரஸ்தாலி தார் ஒன்று ரூ.580-க்கும், மொந்தன் தார் ஒன்று ரூ.710-க்கும், பச்சைநாடன் தார் ஒன்று ரூ.470-க்கும் விலை போனது. மொத்தம் 2,100 வாழைத்தார் ஏலத்திற்கு வந்திருந்தன. மொத்தம் ரூ.5 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் விற்பனையானது.
அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் வாழைத்தார்கள் மொத்தம் ரூ.9 லட்சத்து 15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.