தென்னக காசி பைரவர் கோவிலில் 39 அடி உயர கால பைரவருக்கு பாலாபிஷேகம்

தென்னக காசி பைரவர் கோவிலில் உலக நன்மை வேண்டி 39 அடி உயரம் கொண்ட கால பைரவர் சிலைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.;

Update: 2024-03-13 12:50 GMT

39 அடி உயர பைரவர் சிலைக்கு 5001 லிட்டர் மஹா பாலாபிஷேகம் நடைபெற்றது.

தென்னக காசி பைரவர் கோவிலில் உலக நன்மை வேண்டி 39 அடி உயரம் கொண்ட கால பைரவர் சிலைக்கு 5001 லிட்டர் பால் அபிஷேகம் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.‌

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அடுத்த ராட்டைச்சுற்றிப்பாளையத்தில் தென்னக காசி எனப்படும் கால பைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சிறப்பம்சமாக நுழைவு வாயிலில் 39 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய கால பைரவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் பக்தர்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் உலக நன்மை வேண்டி இன்று தென்னக காசி பைரவர் கோவில் 39 அடி உயரம் கொண்ட கால பைரவருக்கு 5001 லிட்டர் பால் அபிஷேகத்தை ஶ்ரீ விஜய் ஸ்வாமிஜி தலைமையில் நடைபெற்றது.

இந்த பால் அபிஷேகத்தையொட்டி ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழக முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பின்னர், பால் அபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News