சத்தியமங்கலம்: 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு 'குவா குவா'

சத்தியமங்கலம் அருகே பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் சென்றுகொண்டிருந்தபோது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.;

Update: 2022-01-04 00:45 GMT
சத்தியமங்கலம்: 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு  குவா குவா
  • whatsapp icon

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் குன்றி பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்தர். இவரது மனைவி பரமேஸ்வரி.  இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு நேற்று காலை,  பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்களின் உதவியுடன், 108 ஆம்புலன்ஸில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது பரமேஸ்வரிக்கு பிரசவ வலி அதிகமாகியதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சாலையின் ஓரமாக ஆம்புலன்ஸை நிறுத்தினார். இதையடுத்து மருத்துவ உதவியாளர் விஜயன், பரமேஸ்வரிக்கு பிரசவம் பார்த்தார்.இதில் பரமேஸ்வரிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸிலேயே இருவருக்கும் முதலுதவி அளித்து பின்னர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Tags:    

Similar News