ஈரோட்டில் தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு..!
தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி ஈரோட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோட்டில் நடந்தது.
தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி ஈரோட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட இளைஞரணி மற்றும் தமிழரண் மாணவர்கள் அமைப்பு ஆகியன சார்பில், அன்னைத் தமிழில் வணிகப் பெயர் பலகைகளை மாற்றுவோம்; எங்கும் தமிழ், எதிலும் தமிழை நிலை பெறச் செய்வோம் எனும் முழக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது.
இதில், ஈரோடு ஆர்கேவி சாலை, கொங்கலம்மன் கோவில் வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் மாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரமைப்பின் மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்டச் செயலாளர் ராமசந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். இளைஞரணி தலைவர் ராஜா, மாவட்டச் செயலாளர் லாரன்ஸ் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் உள்பட கல்லூரி மாணவர்கள் பலர் பங்கேற்று, கடைகளின் பெயருக்கு ஏற்ப, தமிழில் பெயரை எழுதிக் கொடுத்து பெயர் பலகையை மாற்றும் பணியை மேற்கொண்டனர்.
என்னே ஒரு கொடுமை
தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தமிழில் பெயர் பலகை வைப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய அவலநிலையை எண்ணிப்பார்க்கும்போது வேதனை வெடிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தமிழக அரசு தமிழில் பெயர் வைக்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமே போடலாம். கடை வைத்திருப்பவர்கள் அவர்களே உணர்ந்து தமிழில் பெயர்ப்பலகை வைக்கவேண்டும்.