அந்தியூரில் துணிப்பையை உபயோகிப்பது குறித்து விழிப்புணர்வு

அந்தியூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக துணிப்பையை உபயோகிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;

Update: 2022-04-14 14:00 GMT

அந்தியூர் அரசு மருத்துவமனை சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் துணிப்பை உபயோகம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அந்தியூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக, துணிப்பையை உபயோகிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் விளைவாக, பல்வேறு தீங்குகளை மனித குலம் அனுபவித்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அந்தியூர் அரசு மருத்துவமனை சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் துணிப்பை உபயோகம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

அந்தியூர் பஸ் நிலையம், பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டான உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பல்வேறு இடங்களில், அந்தியூர் அரசு மருத்துவமனை மருத்துவர் கவிதா, சித்த மருத்துவர் செல்வம் ஆகியோர், பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீங்குகளையும், துணிப்பை பயன்பாட்டின் நன்மைகளையும் எடுத்து கூறி விழப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், தவிட்டுப்பாளையம் ஐந்திணை ஆர்கானிக் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட துணிப்பைகளை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News