விஜயமங்கலம் டோல்கேட் பணியாளர்களுக்கு புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

விஜயமங்கலம் டோல்கேட் பணியாளர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று நடந்தது.

Update: 2024-10-16 12:30 GMT

விஜயமங்கலம் டோல்கேட் பணியாளர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பெருந்துறை அருகே விஜயமங்கலம் டோல்கேட் பணியாளர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (16ம் தேதி) நடந்தது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டாரம் விஜயமங்கலம் டோல்கேட் பிளாசாவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த முகாமில் காச நோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், நடமாடும் எக்ஸ்ரே உறுதியின் பயன்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலைப் பழக்க மீட்பு ஆலோசனை குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இந்த முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட காசநோய் மைய ஒருங்கிணைப்பாளர் சுதன் சர்மா, மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார், தேசிய நெடுஞ்சாலை நிர்வாக அலுவலர் ராம்குமாரன், விஜயமங்கலம் டோல் பிளாசா மேலாளர் முரளி மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் 75 பேர்கள் கலந்து கொண்டனர்.


மேலும், முகாமில் கலந்து கொண்ட காசநோய் அறிகுறி உள்ளவர்களுக்கு நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழு மூலமாக மார்பக எக்ஸ்ரே பட பரிசோதனை மற்றும் சளிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News