பவானி வட்டார ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு புகையிலை விழிப்புணர்வு முகாம்

பவானி வட்டார ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் விநியோகம் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-18 14:22 GMT

பவானி வட்டார ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பவானி வட்டார ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் விநியோகம் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் விநியோகம், புகையிலை எதிர்ப்பு, டெங்கு தடுப்பு மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


இந்த முகாமில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தமாக பராமரிப்பதின் அவசியம், பாதுகாப்பான குடிநீர் விநியோக முறைகள், குளோரினேசன் முறைகள், வயிற்றுப்போக்கு நோயின் அறிகுறிகள் அதன் காரணிகள், ஓஆர்எஸ் கரைசல் தயாரிக்கும் முறை அதன் நன்மைகள் டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம், புகையிலை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள், உடல்நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய தலைமுறையினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, இளம் வயது திருமணத்தால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், இளம் வயது கர்ப்பத்தால் ஏற்படும் இரத்த சோகை மற்றும் உடல் நல பாதிப்புகள், தாய் சேய் மரணங்கள், குறை பிரசவங்கள், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.

இம்முகாமில் ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தை சேர்ந்த மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி மேலாளர், சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், பாலமுருகன், சங்கர், ஜெகதீஷ் குமார், ரவி, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் 110 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான பரிசோதனைகள் நடைபெற்றது.

Tags:    

Similar News