கோபியில் மில் தொழிலாளர்களுக்கு டெங்கு, புகையிலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்

Erode news- ஈரோடு மாவட்டம் கோபி அருகே தனியார் மில் தொழிலாளர்களுக்கு டெங்கு மற்றும் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை (இன்று) நடைபெற்றது.

Update: 2024-05-25 09:15 GMT

Erode news- பா.வெள்ளாளபாளையத்தில் உள்ள தனியார் தேங்காய் மில்லில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு டெங்கு, புகையிலை தடுப்பு விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

Erode news, Erode news today- கோபி அருகே தனியார் மில் தொழிலாளர்களுக்கு டெங்கு மற்றும் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பா.வெள்ளாளபாளையத்தில் உள்ள தனியார்  தேங்காய் மில்லில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. சிறுவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் டாக்டர் பிரவீனா தலைமையில் இம்முகாமில் கலந்துகொண்ட நபர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு வாய்ப்புற்று நோய் பரிசோதனை செய்யப்பட்டது .


தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் பரவும் விதம் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள், மழைக்கால நோய்கள் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள், மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய சுற்றுப்புற சுகாதார பராமரிப்பு வழிமுறைகள், புகையிலைப் பொருட்கள் உபயோகப்படுத்துவதனால் வரும் தீமைகள் மற்றும் உடல் நல பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்று நோய்க்கான அறிகுறிகள் மற்றும் பரிசோதனை முறைகள் குறித்து ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவக்குமார் எடுத்துரைத்தார்.


இம்முகாமில் மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் மகேந்திரன், சிறுவலூர் வட்டார நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் டாக்டர் பிரவீனா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பி. செல்வன், பா.வெள்ளாளபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த சுகாதார ஆய்வாளர்கள் நவீன் குமார், சிவா, கூகலூர் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கைலாசம், இடைநிலை சுகாதார பணியாளர், பெண் சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் தொழிலாளர்கள் 70 பேர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News