நாடாளுமன்றத் தேர்தல் 2024: ஈரோடு தொகுதியில் திமுக முன்னிலை
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் எந்த வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார் என்ற தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது Native News தமிழ்.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முதல் சுற்று நிலவரத்தை பார்ப்போம்.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்ததும், பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை ) காலை 8 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து, அதிக வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் பிரகாஷ் முன்னிலை பெற்றார்.
தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் பிரகாஷ் 18,486 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 8,075 வாக்குகளும் பெற்றிருந்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன் 1,531 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாகா வேட்பாளர் விஜயகுமார் 1,987 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதன்மூலம், திமுக வேட்பாளர் பிரகாஷ் 10,411 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முடியும் வரை முன்னணி நிலவரங்கள் மற்றும் முடிவுகளை தெரிந்து கொள்ள Native News தமிழ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்