ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் வரத்து அதிகரிப்பு விலையும் உயர்வு
ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து அதிகரித்ததால், விலை உயர்ந்து விற்பனை ஆனது.
ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து அதிகரித்ததால், விலை உயர்ந்து விற்பனை ஆனது.
ஈரோடு ஸ்டோனி பாலம் கருங்கல்பாளையம் காவிரி சாலையில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு காரைக்கால், தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் விற்பனைக்கு அதிக அளவில் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் 25 டன்கள் மீன் வரத்தாகி இருந்தது. இந்த வாரம் மேலும் மீன்கள் வரத்து அதிகரித்து 40 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஆடி மாதம் முடிவடைந்ததையொட்டி, மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட மீன் வரத்து அதிகமாக இருந்ததால், மீன் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
இன்று (25ம் தேதி) விற்பனையான மீன்களின் விலை கிலோ ரூபாயில் பின்வருமாறு, வஞ்சரம்-ரூ.1,100, விலாங்கு-ரூ.500, தேங்காய் பாறை-ரூ.550, சங்கரா-ரூ.400, வெள்ளை வாவல்-ரூ.850, கிளிமின்-ரூ.650, சீலா-ரி.550, மயில் மீன்-ரூ.400, ப்ளூ நண்டு-ரூ.700, சாதாரண நண்டு-ரூ.400, கடல் இறால்-ரூ.750, கடல்பாறை-ரூ.550, கனவா-ரூ.450, நெத்திலி-ரூ.350, கொடுவா-ரூ.850.