அந்தியூரில் பர்கூர் மலைவாழ் மக்களின் கைவினைப் பொருள்கள் கண்காட்சி
அந்தியூரில் பர்கூர் மலைவாழ் மக்களின் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை மேளா நடைபெற்றது
அந்தியூரில் பர்கூர் மலைவாழ் மக்களின் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை மேளா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச் சந்தை அருகே பர்கூர் மலைவாழ் மக்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை திங்கட்கிழமை (நேற்று) நடைபெற்றது.
அந்தியூர் அல்ட்ராடெக் தொண்டு நிறுவனம் ஒருங்கிணைப்பின் மூலம் நடந்த நிகழ்ச்சியில், நபார்டு வங்கி நிதியுதவியுடன் பர்கூர் மலை கிராம ஊராட்சி சோழகனை கிராமத்தில் 30 நபர்களுக்கு மூங்கில் மூலம் கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்வது குறித்து திறன் பயிற்சி 15 நாட்கள் வழங்கப்பட்டு அவர்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள் சந்தைப்படுத்தும் நோக்கத்தோடு, அந்தியூர் வார சந்தையில் வெளிப்புற அரங்கு அமைத்து கண்காட்சி மற்றும் விற்பனை மேளா நடத்தப்பட்டது.
இதில், அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பின்னர், அவர் கூறுகையில், பர்கூர் மலைவாழ் மக்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காகவும், அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.
நிகழ்ச்சியில், அந்தியூர் பேரூராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி, அல்ராடெக் தொண்டு நிறுவனர் தண்டாயுதபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.