ஈரோடு மாவட்டத்தில் நாளை (28ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்
ஈரோடு மாவட்டத்தில் நாளை (28ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.;
ERODE DISTRICT POWER SHUTDOWN
Erode Today News, Erode News, Erode Live Updates - ஈரோடு மாவட்டத்தில் நாளை (28ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (28ம் தேதி) புதன்கிழமை நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மின்மாற்றிகள், மின்கம்பங்களில் இருக்கும் பழுது, செடி கொடிகள் அகற்றும் பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள் முடிந்த பின்னர் சீரான மின்சாரம் வழங்கப்பட உள்ளது. எனவே, மின்தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சி அடுத்த கொடுமுடி துணை மின் நிலையம் (காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கொடுமுடி புதிய, பழைய பேருந்து நிலைய பகுதிகள், ரோஜா நகர், எஸ்.என்.பி. நகர் மற்றும் காங்கேயம் சாலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.