அறச்சலூர் நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி 30வது ஆண்டு விழா

Erode news- ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள நவரசம் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் 30வது ஆண்டு விழா நடைபெற்றது.;

Update: 2024-04-02 06:45 GMT

Erode news- நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி ஆண்டு விழாவில் எடுத்த படம்.

Erode news, Erode news today- அறச்சலூர் அருகே உள்ள நவரசம் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் 30வது ஆண்டு விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் நவரசம் மகளிர் கல்லூரியில் 30வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். கல்லூரியின் பொருளாளர் பழனிசாமி தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் செல்வம் ஆண்டு அறிக்கை வாசித்தார்.


தி நவரசம் அகாடமி சிபிஎஸ்இ பள்ளியின் செயலாளர் கார்த்திக், தாளாளர் அருண் கார்த்திக், பொருளாளர் பொன்னுவேல் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரியின் துணைத் தலைவர் கோபால், துணைப் பொருளாளர்கள் செல்வராஜ், கைலாசம் மற்றும் கல்லூரி கமிட்டி உறுப்பினர்கள் மதியரசு, சிவசுப்பிரமணி, அமிர்தநாதன், கார்த்திகேயன், சின்னுசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் ஈரோடு கதிர் கலந்து கொண்டு பேசுகையில், கல்லூரியில் படிக்கின்ற காலம்தான் மாணவிகளுக்கு பொற்காலம். இந்த அற்புதமான காலத்தை அழகாக பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் உயரலாம். பெண்கள் இன்றைக்கு பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். அறிவிலும் ஆற்றலிலும் மேம்பட்டு வருகின்றனர். இன்றைக்கு இஸ்ரோவில் கூட பெண் விஞ்ஞானிகள் அளப்பரிய சாதனை புரிந்து வருகின்றனர்.

வீட்டையும் நாட்டையும் உயர்த்துகின்ற பெண்களுக்கு கொடுக்கின்ற கல்வி ஆனது உண்மையிலேயே பாராட்டிற்குரியது. இந்த சேவையை 30 ஆண்டு காலமாக கிராமப்புறத்தில் செய்து வருகின்ற நவரசம் மகளிர் கல்லூரியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாரதியார் பல்கலைக்கழக அளவில் சிறந்த கல்லூரியாக இருக்கின்ற நவரசம் கல்லூரி தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமான கல்லூரியாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

படிப்பதோடு வேலைவாய்ப்புத் திறன்களை மெருகேற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார். விழாவில் கல்லூரிப் பேரவையின் தலைவி மேக்னா சிங் கல்லூரிப் பேரவையின் ஆண்டுச் செயலறிக்கை வாசித்தார். கல்லூரிப் பேரவை முதுகலை பொறுப்பாளர் தர்ஷினி நன்றி கூறினார். தொடர்ந்து மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்,  சலங்கை ஆட்டமும், கிராமிய நடனங்களும் நடைபெற்றது.

Tags:    

Similar News