மொடக்குறிச்சி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டார உணவு பாதுகாப்புத் துறை அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.;
மொடக்குறிச்சி வட்டார உணவு பாதுகாப்புத் துறை அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டாரம் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் எட்டிக்கன் பணி நிறைவு பாராட்டு விழா, ஈரோடு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.தங்கவிக்னேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்டம் சார்பில் மாவட்டத் தலைவர் இரா.க.சண்முகவேல், மாவட்ட பொருளாளர் உதயம்.பி.செல்வம், மாவட்ட இளைஞரணித் தலைவர் ஏ.ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.லாரன்ஸ் ரமேஷ், மாநகர நிர்வாகிகள், ஈரோடு மாநகராட்சி நேதாஜி தினசரி மார்க்கெட் கனி சங்க நிர்வாகிகள், மூலம் பாளையம் சங்க நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கௌரவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினர்.
மேலும், நடைபெற்ற இவ்விழாவில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், அவர்களின் உறவினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.