கோபி அருகே கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு கூட்டம்

கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-30 10:26 GMT

மொடச்சூர் கிராம சபைக் கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தகுதியுடைய நபர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு தகுதியுடைய பயனாளிகளிடம் மனுக்கள் பெறப்பட்டது. 

தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சி பகுதிகளில் குடிசை வீட்டில் வசிப்பவர்ளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், புதிய வீடு கட்டுவதற்கான தகுதியடைய பயனாளிகளை தேர்வு செய்வதற்காக சிறப்பு கிராம சபை கூட்டத்தினை இன்று (30ம் தேதி) நடத்திட அரசு உத்தரவிட்டது.

அதன் படி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மொடச்சூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, ஊராட்சி தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில், ஊராட்சி செயலர் ராஜாமணி பணி மேற்பார்வையாளர் விஜயா மற்றும் வார்டு உறுப்பினர்கள் திருவேங்கடம், வாசுகி லட்சுமணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட தகுதியுடைய 10க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

Tags:    

Similar News