ஈரோடு மாநகராட்சியில் நகர சுகாதார மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ஈரோடு மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், நகர சுகாதார மேலாளர் பணிக்கு, தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.;
ஈரோடு மாநகராட்சி பொது சுகாதார பிரிவில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான 4 நகர சுகாதார மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
நகர சுகாதார மேலாளர் பணியிடத்திற்கு தேவையான கல்வி தகுதிகள்:-
1.எம்.எஸ்சி.நர்சிங் மற்றும் குழந்தைகள் நலம், மகளிர் நலம் மற்றும் பொது சுகாதார துறையில் பணிபுரிந்த அனுபவம்
(அல்லது)
2. பி.எஸ்சி நர்சிங் மற்றும் பொது சுகாதார துறையில் மூன்று வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும். தமிழ் நாடு நர்சிங் கவுன்சிலிங்கில் கல்வி தகுதி பதிவு பெற்ற இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 14-07-2023, மாலை 5.00 மணி வரை.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:- ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு- 638001.