சென்னிமலை தனியார் நிறுவனத்தில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

சென்னிமலை ஈங்கூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் புகையிலை எதிர்ப்பு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2024-05-24 13:08 GMT

ஈங்கூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் புகையிலை எதிர்ப்பு, டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த ஈங்கூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் புகையிலை எதிர்ப்பு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டாரம் வெள்ளோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட ஈங்கூரில் அமைந்துள்ள அக்னி ஸ்டீல்ஸ் நிறுவன பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு புகையிலை எதிர்ப்பு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


இம்முகாமில் புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் உடல்நல பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புற்றுநோய் பாதிப்புகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம், மழைக்கால நோய்கள் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள், மழைக்காலத்தில் பராமரிக்க வேண்டிய சுற்றுப்புற சுகாதார வழிமுறைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில், ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலகத்தை சேர்ந்த மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, சுகாதார ஆய்வாளர்கள், அக்னி ஸ்டீல்ஸ் நிறுவன செயலாளர், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 110 பேர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News