பெருந்துறை அரசு பள்ளியில் போதை பழக்க எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

பெருந்துறை நடுநிலைப்பள்ளியில் காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை போதை பழக்க எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.

Update: 2024-06-27 12:09 GMT

பெருந்துறை கிழக்கு நடுநிலைப்பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பெருந்துறை நடுநிலைப்பள்ளியில் காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை போதை பழக்க எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (27ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டாரம் பெருந்துறையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் (கிழக்கு) பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காசநோய் ஒழிப்பு, புகையிலை மற்றும் போதை பழக்க எதிர்ப்பு, பாதுகாப்பான குடிநீரின் அவசியம் டெங்கு தடுப்பு குறித்து சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


இந்த முகாமில் காச நோய் பரவும் விதம், காச நோயின் அறிகுறிகள், காச நோயின் வகைகள் அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், இந்தியாவில் காச நோய் அதிகரிப்பால் ஏற்படும் மரண விகிதங்கள், காச நோய்க்கான சிகிச்சை மற்றும் பரிசோதனை இலவசமாக கிடைக்கும் இடங்கள், புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் உடல் நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய தலைமுறையினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


மேலும், பாதுகாப்பான குடிநீரின் அவசியம் அதனால் தடுக்கப்படும் நோய்கள், வயிற்றுப் போக்கு நோய்க்கான காரணிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள், கை கழுவும் முறைகள், ஓ ஆர் எஸ் கரைசல் தயாரிக்கும் முறை அதன் பயன்கள் டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம், டெங்கு தடுப்பு பணியில் மாணவர்களின் பங்கு குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட சுகாதார அலுவலகத்தை சேர்ந்த மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, பெருந்துறை காசநோய் மைய முது நிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார், பல்நோக்கு சுகாதார செவிலியர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவ, மாணவியர்கள் 160 பேர்கள் கலந்து கொண்டனர். முகாமின், இறுதியில் புகையிலை மற்றும் போதைப் பழக்க எதிர்ப்பு உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News