அந்தியூர் ஒன்றிய அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி உத்தரவு

அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி உத்தரவை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

Update: 2021-11-08 11:45 GMT

பயணாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணையை வழங்கும் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம் பங்கேற்று, எண்ணமங்கலம், கெட்டிசமுத்திரம், குப்பாண்டம்பாளையம், பிரம்மதேசம் உள்ளிட்ட ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகள் 40 நபர்களுக்கு பணி உத்தரவு வழங்கினார்.

இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News