பர்கூர் மலைப் பகுதியில் 467 பேருக்கு. 52.71 லட்சத்தில் நலத்திட்ட உதவி
பர்கூர் மலைக் கிராம மக்கள் 467 பேருக்கு ரூ. 52.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.;
அந்தியூரை அடுத்த பர்கூர் ஊராட்சியில் தேவர்மலை,தாமரைக்கரை, பர்கூர் மலைக் கிராம மக்கள் 467 பேருக்கு ரூ. 52.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சிக்கு,மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், பர்கூர் ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த 467 பயனாளிகளுக்கு ரூ.52.71 லட்சம் மதிப்பிலான அரசின் நலதிட்ட உதவிகளை வழங்கினார். மேலும் தாமரைக்கரையில் ரூ. 10.65 லட்சம் மதிப்பில் குடிநீர்த் திட்டப் பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.
வருவாய்த் துறையின் சார்பில் 88 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 18 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், 198 பேருக்கு பழங்குடியினர் குடும்ப நல வாரிய அட்டைகள், 134 பேருக்கும் பழங்குடியினர் ஜாதி சான்றுகள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் 23 பேருக்கு ரூ. 39.10 லட்சத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் வீடு கட்டும் உத்தரவுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.