வரட்டுப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை
வரட்டுப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையால் நீர்வரத்து அதிகரிப்பு;
வரட்டுப்பள்ளம் அணை நீர்பிடிப்பு பகுதிகளான தாமரைக்கரை தாளக்கரை கொங்காடை செங்குளம் கோவில் நத்தம் மணியாச்சி மற்றும் சுற்றுப்புற மலைப்பகுதிகளில் நேற்று இரவு 11 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மிதமான மழை பெய்து வந்தது. இதனால் ஏற்கனவே வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33 அடியை எட்டி உபரி நீர் வெளியேறி வந்த நிலையில் இரவு பெய்த கன மழையால் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து கெட்டி சமுத்திரம் ஏரி அந்தியூர் பெரிய ஏரி ஆகிய ஏரிகளுக்கு மூலக்கடை மற்றும் புதுப்பாளையம் பள்ளங்கள் வழியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் கெட்டி சமுத்திரம் ஏரி மற்றும் பெரிய ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து மிக விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது.இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.