ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் எதிரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் எதிரில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை ஏற்றத்திற்கு காரணமான பாஜக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட வணிகர் அணி அமைப்பாளர் மாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செய்தி தொடர்பாளர் பாவலன், ஈரோடு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
இதில், மாநில வணிகரணி துணைச் செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட பொருளாளர் தங்கவேல், மாநிலத் துணைச் செயலாளர் சாதிக், அந்தியூர் ஒன்றிய செயலாளர் தங்கராசு, தொகுதி செயலாளர்கள் விஜயபாலன், வெற்றிச் செல்வன், பொன் தம்பிராஜ், ஆற்றலரசு, அந்தியூர் ஒன்றிய பொருளாளர் குருசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் நாகராஜ், பவானி ஒன்றிய செயலாளர் பால்ராஜ், பவானி நகர செயலாளர் முடியரசு, தொகுதி துணை செயலாளர் குணவாளன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் கர்ணா, ஒலகடம் வெங்கடேஷ், தாவீத்ராஜ், முற்போக்கு மாணவர் கழகம் செந்தமிழ் வளவன், தமிழரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாட்டுவண்டியில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மண் அடுப்பு கேஸ் சிலிண்டருடன், ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.