அந்தியூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: எம்.எல்.ஏ. துவக்கி வைப்பு

அந்தியூரில், 5 ஆயிரத்து 700 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை, எம்எல்ஏ வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.

Update: 2021-11-11 09:15 GMT

மாக்கல்புதூரில் , கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை எம்.எல்.ஏ வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். 

ஈரோடு மாவட்டம்,  அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஊராட்சி, மாக்கல்புதூர் கிராமத்தில்,  கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம், இன்று கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது.

இதில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜி. வெங்கடாசலம் கலந்து கொண்டு , பிரம்மதேசம் கால்நடை மருந்தக எல்லைக்குட்பட்ட, மொத்தம் 5 ஆயிரத்து 700 கால்நடைகளுக்கு,  கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்கி வைத்தார்.  


மழைக்காலங்களில்,  கால்நடைகளுக்கு அதிகமாக கோமாரி நோய் பரவுவதால், நோய் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளதாக,  கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். உதவி இயக்குநர் எஸ். விஷ்ணுகந்தன், மருத்துவர் எஸ். அர்ஜுணன், கால்நடை ஆய்வாளர் சர்மிளா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News