விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் உயிரிழப்பு
அந்தியூரில் நடந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பட்டதாரி ஆசிரியர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர் வீதி பகுதியை சேர்ந்தவர் வேலுமணி (வயது 57). இவர் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் அவர் அந்தியூர் பர்கூர் ரோட்டில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த மாருதி ஆல்டோ கார் மோதியதில் படுகாயமடைந்த ஆசிரியர் வேலுமணி, அந்தியூரில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை அவரது உடல்நிலை மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பட்டதாரி ஆசிரியர் வேலுமணியின் உடல் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது