ஈரோட்டில் நாளை முதல் 213 டாஸ்மாக் கடைகள் திறப்பு : தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில், நாளை முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அரசு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, 213 டாஸ்மாக் கடைகளிலும் தொற்று பரவல் நடவடிக்கையாக, தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

Update: 2021-07-04 07:15 GMT

ஈரோட்டில், டாஸ்மாக் கடை ஒன்றின் முன்பாக, தடுப்புகள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க, வட்டம் வரையப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 213 டாஸ்மாக் கடைகளும், 128 பார்களும் செயல்பட்டு வந்தன. சாதாரண நாட்களில் ரூ 3 கோடி முதல் 4 வரை வியாபாரம் நடைபெறும். பண்டிகை, விசேஷ காலங்களில் ரூ. 10 கோடி வரை வியாபாரம் நடைபெற்று வந்தது.

தற்போது, கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு,  ஈரோட்டில் நாளை முதல் டாஸ்மாக் கடை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 213 டாஸ்மாக் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்க உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மது பிரியர்களின் கூட்டத்தை குறைக்கும் வகையில்,  பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டு வருகிறது.

மது வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம் பார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்திலுள்ள 128 பார்களும் வழக்கம்போல் மூடப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு மதுக்கடைகள் செயல்பட உள்ளதால், மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News