மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

வனப்பாதுகாப்பு சட்டத்திருத்தத்தை கைவிடக்கோரி தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-11-08 10:15 GMT

அந்தியூர் வனச்சரக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தினர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனச்சரக அலுவலகம் முன்பு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் வன பாதுகாப்பு சட்டத்தை கைவிடக் கோரி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 1980 வன பாதுகாப்பு சட்டத்தை திருத்தம் செய்வதால் வனத்தை தனியாருக்கு கொடுக்கவும், வனத்திற்குள்ளும், கீழேயும் உள்ள இயற்கைச் செல்வங்களை கொள்ளை அடிக்க வழிவகை செய்வதாகும்.

மேலும் 2006 வன உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யக் கூடியதாகவும் உள்ளதால் உடனடியாக சட்டத் திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து தமிழக அரசு வனப் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News