வரட்டுப்பள்ளம் அணையின் உபரி நீர் திறப்பு: மூழ்கிய வனம் குருநாதசாமி கோவில்
வரட்டுப்பள்ளம் அணை உபரி நீர், அந்தியூர் வனம் குருநாதசாமி கோவிலை மூழ்கடித்து பாய்ந்தோடியது;
குருநாதசாமி கோவில்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று காலை 7:00 மணி வரை மீண்டும் கனமழை பெய்தது. இதனால் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர், வனம் அருகே குருநாதசாமி கோவிலை ஒட்டிய வாய்க்காலை நிரப்பி, கோவிலை மூழ்கடித்து பாய்ந்தோடியது.
அதேசமயம் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், எண்ணமங்கலம் ஏரி முழு கொள்ளளவை எட்டி, அதிகாலையில் உபரிநீர் வெளியேறியது. இதனால் மூலக்கடை, குருநாதபுரம், புதுப்பாளையம் பகுதி குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. ஏரி உபரி நீரால், கோவிலூர் பாலம் உடைந்தது. தொடர்மழையால் கெட்டி சமுத்திரம், பெரிய ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.