அந்தியூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியில் பேருந்துகள் உரிய நேரத்திற்கு வருவதில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2021-11-23 11:15 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர் அடுத்த கொளத்தூரிலிருந்து சென்னம்பட்டி செல்லும் வழியில் உள்ள கொமராயனூர், தேவலன்தண்டா பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு கடந்த சில நாட்களாக பேருந்து வராததால் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளததால்  ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேவலன் தண்டா பேருந்து நிறுத்தத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளித்திருப்பூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார்  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இனி வரும் காலங்களில் பேருந்து சரியான நேரத்தில் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News