பொதுமக்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்: கிராம சபை கூட்டத்தில் எம்எல்ஏ பேச்சு

அந்தியூர் கெட்டிசமுத்திரம் கிராம சபை கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதி.

Update: 2021-10-02 10:45 GMT

சிறப்பு அழைப்பளராக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு பேசினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் கிராம ஊராட்சி சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கெட்டிசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் மாறன் மற்றும் உப தலைவர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அந்தியூர் வட்டாசியர் விஜயகுமார் , வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பளராக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டர். தொடர்ந்து அவர் பேசுகையில் கெட்டிசமுத்திரம் ஊராட்சி பொதுமக்களின் குறைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இக்கூட்டத்திற்கு அந்தியூர் வருவாய் அலுவலர் உமா , கெட்டிசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் பானுரேகா , வருவாய்த்துறை , ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News