பராமரிப்பு பணிக்காக சென்னம்பட்டி பகுதியில் இன்று மின்தடை
சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று மின் தடை செய்யப்படுகிறது.;
சென்னம்பட்டி பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை சென்னம்பட்டி, கண்ணாமூச்சி, தொட்டிகிணறு, கொமராயனூர், கிட்டம்பட்டி, சனி சந்தை, முரளிபுதூர், வெள்ளக்கரட்டூர், விராலிக்காட்டூர். குருவரெட்டியூர், புரவிபாளையம், ஆலாமரத்து தோட்டம், குரும்பபாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், ஜி.ஜி.நகர், முரளி, ஜரத்தல், ரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.