அந்தியூர் அருகே மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் கைது
அந்தியூர் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.;
அந்தியூர், பிரம்மதேசம், அரியானூரை சேர்ந்த நாகராஜ் மனைவி நந்தினி (வயது 26). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
நந்தினி, பிரம்மதேசம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வந்த நிலையில், நேற்று முன்தினம் கணவர் நாகராஜ் குடிபோதையில் அங்கு வந்து மனைவி நந்தினியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென்று நந்தினியை குத்தினார்.
இதனால் காயமடைந்த நந்தினி, சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து நந்தினி கொடுத்த புகாரின்பேரில், அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர்.