அந்தியூர் அருகே விஷம் குடித்த வியாபாரி சிகிச்சை பலனின்றி சாவு
அந்தியூர் அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகக்கூறி பூச்சி மருந்து குடித்த வியாபாரி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த கூத்தம்பூண்டி அருகே உள்ள சென்னிமலைக்கவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் செல்லமுத்து வயது 39. இவர் அப்பகுதியில் வாழைக்காய் வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கடந்த 4ம் தேதி அந்தியூர் அருகே உள்ள பச்சாம்பாளையம் தபால் நிலையம் அருகில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
இதனையடுத்து சின்னியம்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.