ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீரை மலர் தூவி வரவேற்ற எம்எல்ஏ
11ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய அந்தியூர் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை மலர் தூவி எம்எல்ஏ வரவேற்றார்.;
அந்தியூர் பெரிய ஏரி 16 அடி கொள்ளளவு கொண்டது. பரப்பளவு அதிகம் உள்ள இந்த ஏரியில் 41.8 மில்லியன் கன அடி அளவு தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.தற்போது ஏரியின் நீர்மட்டம் 41.8 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. நேற்று மாலை 6.15 மணிக்கு ஏரி நிரம்பியது.இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தியூர் பெரிய ஏரி நேற்று நிரம்பியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பழம், தேங்காய் வைத்து வழிபட்டு கரைபுரண்டு ஓடிய தண்ணீரை எடுத்து வழிபட்டு சென்றனர். தாழ்வான பகுதியில் உள்ள பொது மக்கள் மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் என பொதுப்பணித்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று அந்தியூர் பெரிய ஏரி 11 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதையொட்டி அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏஜி.வெங்கடாசலம் மலர்தூவி வரவேற்றார். உடன் வட்டாட்சியர் விஜயகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.