உடல்நலம் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவிய எம்எல்ஏ
அந்தியூர் அருகே பக்கவாதம் நோயால் கடந்த 4 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வந்தவரை, எம்எல்ஏ கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.
அந்தியூர் பேரூராட்சி தவிட்டுப்பாளையம் அம்பேத்கர் வீதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி வயது 56, பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு கை கால் சரியாக வேலை செய்யாமல் கடந்த 4ஆண்டுகளாக சிகிச்சை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார். இவர் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலத்திடம் கோரிக்கை மனுவை வழங்கியதன் மூலம், எம்எல்ஏ அவரை அழைத்து சின்னத்தம்பி பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.