அந்தியூரில் மெகா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு ; ஆய்வுக் கூட்டம்

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மெகா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-10-07 09:00 GMT
அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில் மெகா தடுப்பூசி முகாம் குறித்த நடந்த ஆய்வு கூட்டம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் கட்டமாக மெகா தடுப்பூசி நடைபெறவுள்ளது. இது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம், இன்று காலை, அந்தியூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அந்தியூர் வட்டாச்சியர் விஜயக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், வட்டார மருத்துவ அலுவலர் மோகனவள்ளி கலந்து கொண்டு எந்தெந்த பகுதியில் தடுப்பூசி முகாம் அமைக்கலாம் என ஆலோசனை நடத்தினார்.

மேலும், மலை கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை பற்றியும் விவாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News