அந்தியூர் அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது
அந்தியூர் அருகேயுள்ள மூலக்கடை அடுத்த பனங்கொரையில் கஞ்சா விற்பனை செய்த நபரை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.;
அந்தியூர் அருகேயுள்ள மூலக்கடை அடுத்த பனங்கொரையில் வசித்து வருபவர் பழனிச்சாமி. 55. இவர் சட்ட விரோதமாக வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக, வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், நேற்று இரவு, வெள்ளித்திருப்பூர் காவல் உதவி ஆய்வாளர் வேலுமுத்து மற்றும் போலீசார், பனங்கொரையில் உள்ள பழனிச்சாமியின் வீட்டில் சோதனை செய்தனர். சோதனையில், சுமார் ஐந்து கிராம் எடையுள்ள கஞ்சாவை 20 பாக்கெட்டுகளில் அடைத்து, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், பழனிச்சாமியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வெள்ளித்திருப்பூர் போலீசார், கஞ்சாவை சப்ளை செய்த குருவரெட்டியூரை சேர்ந்த சிவகாமி என்ற பெண்ணை தேடி வருகின்றனர்.