அந்தியூர்: கோவிலூர் செலம்பூர் அம்மன் கோவில் குண்டம் திருவிழா
அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் அருகே உள்ள கோவிலூர் செலம்பூர் அம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் அருகே உள்ள கோவிலூர் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற சிலம்பூர் அம்மன் திருக்கோவில்
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் தீ மிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி கடந்த 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
முன்னதாக வனப் பகுதிக்குள் இருந்து அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது