வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது மண்சரிவு: ஒருவர் பலி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் பலியானார்.;
நாகராஜ்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் இடத்தில் உள்ள பர்கூர் மலையில் உள்ள ஊசிமலைப் பகுதியைச் சேர்ந்தவர் சன்னேகவுடர். இவருடைய இடத்தில் வீடு கட்டுவதற்கு ஊசிமலைப் பகுதியைச்சேர்ந்த நாகராஜ்(35) என்பவர் மற்றும் இருவருடன் அஸ்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக மண்சரிவு ஏற்பட்டதில் நாகராஜ் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே இறந்து விடுகிறார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.